2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவடைவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பச் செயல்முறை, முழுமையாக நிகழ்நிலை ஊடாகவே முன்னெடுக்கப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் நிகழ்நிலை ஊடாக விண்ணப்பிக்க முடியாது என்பதுடன் விண்ணப்பங்களை ஏற்கும் காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் தேவைப்படின் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தைத் தொடர்புகொள்ள முடியும்.
தொலைபேசி: 011-2785922, 011-2784208, 011-2784537
FAX : 011-2784422
மின்னஞ்சல்: gcealexamsl@gmail.com