மாத்தளை, உக்குவெல, உடங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இளம் தாய் நேற்று வியாழக்கிழமை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக கந்தேநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
உக்குவெல, உடங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த தாயின் சடலம் மாத்தளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கந்தேநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.