ஈரானுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, இலங்கை கடல் பகுதிக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து 700 கிலோமீற்றர் தென்கிழக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கப்பல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது சுமார் 300,000 டன் கொள்ளளவு கொண்ட ஒரு கச்சா எண்ணெய் கப்பல் என்றும், அமெரிக்காவின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் இந்தக் கப்பல் மீது தடைகளை விதித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கப்பல் ஒரு இந்திய கப்பல் நிறுவனத்துடன் தொடர்புடையது என்ற தகவலும் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தக் கப்பல் ஏப்ரல் 10 ஆம் திகதி வளைகுடாப் பகுதியிலிருந்து புறப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கையின் காலி துறைமுகம் அருகே சிறிது நேரம் நின்றதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.