முச்சக்கரவண்டி ஒன்றில் சட்டவிரோதமாக ஏற்றி வரப்பட்ட கன்றுக்குட்டி ஒன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – கொழும்பு பழைய வீதியில் உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி, சட்டவிரோதமாக கன்றுக்குட்டி ஒன்றினை ஏற்றி பயணித்த முச்சக்கரவண்டியை, ஹட்டன் ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போதே, குறித்த கன்றுக்குட்டி மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, கன்றுக்குட்டியை கடத்தி செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள் மூவர் மிருகவதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்
கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட கன்றுக்குட்டி முச்சக்கரவண்டி என்பவற்றை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.