கொத்மலை இறம்பொடை கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், அடையாளம் காணப்படாத உடல் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 46 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.