காலியில் ஹபராதுவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பேருந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.