இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவைச் சந்தித்து, இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் தனது ‘X’ சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் சமகால முன்னேற்றங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.










