ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு அருகில் இந்தியா, பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக குறிப்பிடப்படுகிறது .
இநநிலையில் எல்லைப்பகுதியில் எந்தவித போர் நிறுத்த மீறலும் இடம்பெறவில்லை என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.