மொனராகலை பகுதியில் மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திய சாரதி வெல்லவாய பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லவாய பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தணமல்வில பகுதியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் மற்றுமொரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.