இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை சிறியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337.50 ரூபாவாக அதிகரித்துள்ளது.
செலான் வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.15 ரூபாவிலிருந்து 328.25 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை விலையும் 337.40 ரூபாவிலிருந்து 337.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.
என்.டி.பி வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 327.80 ரூபாவிலிருந்து 328 ரூபாவாகவும், விற்பனை விலை 336.80 ரூபாவிலிருந்து 337 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.40 ரூபாவிலிருந்து 328.50 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், விற்பனை விலையும் 336.54 ரூபாவிலிருந்து 336.65 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 326.58 ரூபா மற்றும் 336.50 ரூபா என மாற்றமின்றிக் காணப்படுகின்றன.
சம்பத் வங்கியிலும் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.50 ரூபாவாகவும், விற்பனை விலை 336.50 ரூபாவாகவும் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்கின்றன.










