அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன.
மில்லியன் டொலர் எனப்படும் நிறுவனமொன்றே இந்த படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதமளவில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதுமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விரைவில் இந்த படம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.