-அம்பாறை நிருபர்-
அம்பாறை – பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் பலநாட்களாக மரமொன்றில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை இனங்காண பொதுமக்களின் உதவியை அக்கரைப்பற்று பொலிஸார் நாடியுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவதுடன் 5 அடி உயரம் கொண்டதாக காணப்படுகின்றது.
மேலும் குறித்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.