மட்டக்களப்பிற்கு வருகை தரும் ஜனாதிபதி: பதாகைகள் அகற்றல்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக நாளை மறுதினம் சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது வருகையை அறிவிக்கும் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இவை தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என மாவட்ட தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து நேற்று புதன்கிழமை இரவு மாவட்ட பொலிஸாரினால் இப்பதாகைகள் அகற்றும் பணிகள் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.சுபியான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன.

மாவட்ட செயலக தேர்தல் கண்காணிப்பு குழு உயர் அதிகாரிகளும் இதன் போது பிரசன்னமாகி இருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க