நீரின்றி வாடும் நுவரெலியா மக்கள்

நுவரெலியா லவர்ஸ்லீப் பகுதியிலுள்ள மக்கள் கடந்த 21 நாட்களாக நீரின்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

பொதுவாக பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது பாடசாலை சீருடைய கழுவுவதற்கு கூட நீரின்றி பாடசாலைக்கு செல்லாமல் நீர் தேடியலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக நுவரெலியாவில் கடும் வெப்பமான காலநிலை காணப்படுவதால் விவசாய நடவடிக்கையும் பாதிப்படைந்துள்ளது. பெண்கள் தமது வீட்டு வேலைகளை செய்வதற்கு கூட தண்ணீர் இன்றி சிரமத்திலுள்ளார்கள்.

இது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் நுவரெலியா மாநகர சபை ஆணையாளருக்கு தெரிவித்திருந்த பொழுதும் இதுவரை அதற்கான நடவடிக்கையில் எடுக்கவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்