மட்டக்களப்பு மாவட்டத்தில், 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த, 29 வயது இளைஞர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், குறித்த சிறுமியை தான் காதலிப்பதாக தெரிவித்து, சிறுமியை தனியாக வரவழைத்து அவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த விடயம் குறித்து சிறுமி தனது வீட்டில் தெரிவித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.