பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் விடுதியில் தங்கியிருந்த பெண்ணியல் நோய் வைத்தியர் ஒருவர் நேற்று பிற்பகல் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பெண்ணியல் நோய் மருத்துவராக அவர் கடமை புரிந்து வரும் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரேமானந்தராசா கிருஷ்ணானந்தா (வயது – 30) என்ற வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடும் மன அழுத்தம் காரணமாக அதிகளவான மயக்க மருந்தை உடலில் செலுத்தியமையே அவரது மரணத்திறக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்