பாகிஸ்தானில் 44.2 மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு 156 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- Advertisement -
வைரஸ் மூலம் பரவும் போலியோ, குழந்தைகளின் நரம்பு ஒட்டு உறுப்புகளை பாதித்து இறுதியில் பக்கவாதத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகில் போலியோ தொடர்ந்து பரவி வரும் இரண்டு நாடுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -