வாகன விபத்து: 15 வயது மாணவி உட்பட இருவர் படுகாயம்

 

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை பங்களா வீதிச் சந்தி பகுதியில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மாணவி மற்றும் அவரது தந்தை படுகாயம் அடைந்துள்ளனர்.

மீசாலையில் இருந்து வந்த மோட்டார்சைக்கிளின் பின்புறமாக அதேதிசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் மேற்படி விபத்துச் சம்பவித்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்து பயணித்த மாணவியின் கால் டிப்பருக்குள் அகப்பட்டு படுகாயமடைந்துள்துடன் மோட்டார்சைக்கிளைச் செலுத்திச் சென்ற தந்தையும் காயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்