கிளிநொச்சியில் வாகன விபத்து: பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை கெப் வாகனமொன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கெப் வாகனத்தை ஓட்டிச்சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்