வவுனியா பாவற்குளம் கணேசுவரா மகாவித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

வவுனியா பாவற்குளம் கணேசுவரா மகாவித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 22 மாணவர்களில் விசேட தேவைச்சித்தி உள்ளடங்கலாக 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வெங்கலச் செட்டிகுள கோட்டத்தில் வரலாற்றுச்சாதனை படைத்துள்ளனர்.

விஜயசீலன் கேதுசன்-168, சிறீகரன் அஹனிகா-166, தமிழ்வேந்தன் கிருந்தினி-160, விஜேஸ்வரன் கம்சினி-154, ரகுநாதன் லக்ஷயன்-146, கோமலேசன் வினுயன்-146, கபில்ராஜ் அனுசாந்-52 புள்ளிகளையும், பெற்று சித்தியடைந்து அந்த பாடசாலைக்கும், கிராமத்திற்கும் புகழைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

பாடசாலையின் அதிபர் கா.பிரசன்னா,வகுப்பாசிரியை மற்றும் மாணவர்கள் சிறந்த அடைவுகளைப்பெற அர்ப்பணித்த அனைவரையும் சமூகத்தினர் நன்றி பாராட்டியுள்ளனர்.

புள்ளிகளின் ஒழுங்கிலேயே மாணவர்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. 168,166,160,154,146,146,152