வவுனியா வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வவுனியா ஏ9 வீதி சந்தசோலை சந்தியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வயோதிபர் ஒருவர் சந்தசோலை பகுதிக்கு திரும்பிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் முதியவர் வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கராயன் பிரதேசத்தில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய திஸாநாயக்க (வயது-27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.