எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரியின் சாதனையாளர் விருது விழா

பதுளை  ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரியின் வருடாந்த சாதனையாளர் விருது விழா எதிர்வரும் 30.6.2024 பாடசாலை அதிபர் எஸ்.கண்ணியமூர்த்தி தலைமையில் சிறப்பாக இடம்பெற உள்ளது.

இந்நிகழ்வில் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் தெரிவாகிய 100 மாணவர்கள் பாராட்டப்படுவதோடு கல்வியியல் கல்லூரிக்கு தெரிவாகிய 15 மாணவர்களும் தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சியை பெற்று தொழில்துறையில் ஈடுபட்டுள்ள 10 மாணவர்களும் முப்படையில் இணைந்து பணியாற்றும் 10 மாணவர்களும் மாகாணம் மற்றும் தேசிய மட்ட ரீதியில் இணைப் பாடவிதான செயல்பாடுகளில் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்கள் 50 பேரும் பாராட்டப்பட உள்ளனர்.

அதேபோல பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் 50 .ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளதாக பாடசாலை அதிபர் s.கண்ணியமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்