இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகருக்கும், திருகோணமலை மாநகர சபை முதல்வர் க.செல்வராசா மற்றும் பிரதிமுதல்வர் நெ.மு.மஹ்சூம் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, குச்சவெளி ‘ஜங்கில் பீச்’ (Jungle Beach) விடுதியில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது:
மாநகர சபை அபிவிருத்தி திட்டங்கள்: திருகோணமலை மாநகரப் பகுதியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சவால்களும் பிரச்சினைகளும்: மாநகர சபை தற்போது எதிர்கொண்டு வரும் நிர்வாக ரீதியான சவால்கள், நிதிப் பற்றாக்குறைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
சர்வதேச ஒத்துழைப்பு: திருகோணமலையின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக ஜேர்மன் அரசாங்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமான உதவிகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
