அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விலை இன்று புதன்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 337.97 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.75 ரூபாயாகப் பதிவாகியிருந்தது.
அதேபோல், டொலர் ஒன்றின் விற்பனை விலை 336.60 ரூபாயாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.