இன்றைய ராசி பலன்கள்

#மேஷம்

இன்றைய தினம், பெரும்பாலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கப் பெறும். குடும்பத்தில் தன வரவு நல்ல நிலையில் காணப்படும். கணவன் – மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்குப் புத்திர வழியில் கூட மகிழ்ச்சி ஏற்படும். வேலை அல்லது உத்யோகத்தில் அவ்வப்போது அலைச்சல் ஏற்பட்டாலும் கூட இறுதியில் உங்களது முயற்சியானது நல்ல பலனைத் தரும். சிலருக்குப் பழைய கடன்கள் கூட அடைபடும். ஆன்மீகம் மற்றும் தெய்வ காரியங்களுக்காக சிலர் செலவு செய்வீர்கள். அவ்வப் போது உற்றார் – உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு ஆறுதல் தரும். கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்கள் ஓரளவு நல்ல பலன்களை உங்களுக்குத் தரும். சிலர் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூட மறைமுக எதிர்ப்புகள் விலகும். சிலருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வெளியூர் அல்லது வெளிநாடு தொடர்புடைய வாய்ப்புகள் சிலரைத் தேடி வரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்படச் செயல்படுவார்கள்.

#ரிஷபம்

இன்றைய தினம், உத்யோகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், பணவரவு இருக்கும். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவுவர். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சிலருக்கு, சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் சில அனுகூலப் பலன்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மொத்தத்தில், பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் ஏற்படும். தடைகளை முறியடித்து சாதனை படைப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அவசியத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். இது ஒரு நல்ல நாள்.

#மிதுனம்

இன்றைய தினம், உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து அன்பு பாராட்டுவார்கள். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு கனிந்து வரும். உத்யோகத்தில், நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் நல்ல விதத்தில் பூர்த்தி ஆகும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலைத் தந்தாலுமே கூட இறுதியில் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். கொடுத்த வாக்குறுதிகளை நல்ல படியாக நிறைவேற்றுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறையும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களிடத்தில் திரும்பி வருவார்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு திடீர் வேலை மாற்றம் ஏற்படலாம். அது பிற்காலத்தில் நன்மை தரும் விதத்தில் இருக்கும். இப்படியாகப் பெரும்பாலும் உங்களுக்கு நல்ல பலன்கள் தான் ஏற்படும்.

#கடகம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

#சிம்மம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும் . நல்லன நடக்கும் நாள்.

#கன்னி

சோர்வு, களைப்பு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

#துலாம்

இன்று நீங்கள் நல்லதாகவே நல்ல நோக்கத்தில் கருத்துக்களை சொன்னாலுமே பிறர் அதனை தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். நியாயப் படி கிடைக்க வேண்டிய பண வரவுகள் சரியான நேரத்தில் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். கணவன்-மனைவி இடையே கூட அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். எதிலும் பொறுமையை கடைப்பிடித்து முன்னேறப் பாருங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய எதிர்ப்புகளைக் கடந்தே முன்னேறுபடியாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு முறைக்குப் பல முறை நன்கு யோசித்து செயல்படுங்கள். உத்யோகத்தில் வேலை பளு தவிர்க்க முடியாது.

#விருச்சிகம்

இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தாய் வழி உறவுகளால் நன்மை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். அலுவலகப் பணிச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனை நடப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

#தனுசு

தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி சிறிது சங்கடத்தை ஏற்படுத்தினாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

#மகரம்

தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.

#கும்பம்

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்தினருடன் விளையாடி மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகளை விரைவாக முடித்து அனுப்பிவிடுவீர்கள். வியாபாரத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

#மீனம்

இன்றைய தினம் கொடுக்கல் – வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை முதலீடு செய்யும் சமயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவும். சில தரகர்களின் பேச்சை ஆராய்ந்து அறிந்து சரி பார்த்து பின்னர் செயல்படுத்தவும். பங்குச் சந்தையில் கூட பெரிய முதலீடுகளை நன்கு யோசித்து திட்டமிட்டுச் செய்யவும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தரப்படலாம். இதனால் வேலை பளு அதிகரிக்க இடமுண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களின் கைகள் ஓங்கும் நாள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்