Sri Lanka Tamil News Site

வாழைமரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டு மீட்பு

- Advertisement -

அஹுங்கல்ல – வெலிகந்த பிரதேசத்தில் கருவாடு உற்பத்தி நிறுவனத்திற்கு பின்புறம் உள்ள காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த கிளைமோர் மீட்கப்பட்டதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

வாழைமரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -