ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து: 34 பேரை காணவில்லை

ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து: 34 பேரை காணவில்லை

துனிசியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேரை காணவில்லை.

ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட அகதிகள் படகு ஒன்று நேற்று சனிக்கிழமை துனிசியா கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட 34 பேரை காணவில்லை.

துனிசியாவில் கடந்த 2 நாட்களில் நடந்த 5 வது அகதிகள் படகு விபத்து இதுவாகும்.

மேலும், தேடுதல் பணிகளில் அந் நாட்டு பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்