தீப்பற்றி எரிந்த படகுகள்

அமெரிக்காவின் சியாட்டில் துறைமுக நகரில் 30 க்கும் மேற்பட்ட படகுகள் தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் போது ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மேற்கு துறைமுக நகரான சியாட்டிலில் உள்ள போர்ட்டேஜ் பே பகுதி அருகே, படகு நிறுத்துமிடம் ஒன்றில் வரிசையாக படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அப்பகுதியில் வெடிசத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

முதலில் இரண்டு படகுகள் தீப்பற்றிய நிலையில், வேகமாக மற்ற படகுகளுக்கும் பரவியுள்ளது. இதனை அடுத்து  தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை 3.30 மணி வரைக்கும் மீட்பு பணிகள் நடைப்பெற்றுள்ளது. மீட்பு பணியின் போது நடுத்தர வயது மிக்க நபரை ஒரு கப்பலின் உள்ளிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை பிடித்து மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்