-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர், நேற்று புதன்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமியை, அவரது வீட்டின் அருகே வசிக்கும் 38 வயதுடைய நபர் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமி பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.