-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில், வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார், இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த முகமது ஜிஹாட் பவிஹா (வயது 8) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கடந்த பதின்மூன்றாம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டதை தொடர்ந்து, தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
அதன் பின்னர், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டு, சிறுமி வாந்தி எடுத்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி அதிகாலை நான்கரை மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் வேளையில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
குடல்வளரி ஏற்பட்டதால் வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், அதனால் வாந்தி எடுத்தவேளை சுவாசக் குழாயினுள் வாந்தி சென்ற காரணத்தால் மரணம் சம்பவித்துள்ளதாக, உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.