சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று வியாழக்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,830.68 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு அவுண்ஸ் 79.85 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வினைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.