-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, ஏ-9 வீதியில் நடுவே நின்ற மரம் ஒன்று அண்மையில் வெட்டப்பட்டது.
வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகம் வீதியின் மட்டத்தை விட மேலாக காணப்படுகிறது.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
எனவே அந்த மரத்தின் அடி பகுதியை வெட்டி அகற்ற வேண்டும் என அவ்வீதியால் தினசரி பயணிக்கும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.