தர்பூசணி விதைகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை

நமக்கு இயற்கையாக கிடைக்கும் பழங்களில் கலோரிகள் மினரல்கள் உள்ளது. அவற்றை நாம் எமது ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துவது பற்றி பார்க்கலாம். இன்றைய நாட்களில் எதிர்கொள்ளும் கோடை வெயிலின் தாக்கத்தை தணித்து கொள்ளவும் சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுக்காக்கவும் தர்ப்பூசணி உபயோகமாகிறது.

கோடைக்காலம் தொடங்கினாலே மூலை முடுக்குகள் எங்கும் தர்பூசணிக் கடைகள் களைகட்டும். அதுவும் தற்போது அடிக்கும் வெயில் தாகத்தைத் தவிரிக்க தர்பூசணியின் தேவை இன்னும் அதிகரித்துவிட்டது. 92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய தர்பூசணியை ஊர் பக்கங்களில் தண்ணீர் பழம் என்றே அழைப்பார்கள்.

தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு. முப்பது கிராம் தர்பூசணி விதைகளில் சுமார் 158 கலோரிகள் உள்ளன. ஒரு நாளைக்கு பதினைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டாலே வெறும் 80 கலோரிகள் மட்டுமே இருக்கும்.

உங்களுடைய மாலை நேரங்களில் இதை எடுத்துக் கொள்ளலாம். மற்ற நொறுக்குத் தீனிகளோடு ஒப்பிடும்போது நிறைய வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் கிடைக்கும். கலோரிகளும் குறைவு. இதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த தர்பூசணி விதை ஒரு சிறந்த தேர்வு என்றே சொல்லலாம்.

உடலில் நீர் ஏற்றத்தை அதிகரிக்க தர்பூசணி சாப்பிடும் பலரும் அதன் விதைகளை சாப்பிடாமல் துப்பிவிடுவோம். அப்படியே தெரியாத்தனமாக சாப்பிட்டு விட்டாலும் வயிற்றுக்குள் செடி வளரும் என 90ஸ் கிட் பரிதாபங்கள் வேறு..! ஆனால் உண்மையில் அது பல மருத்துவகுணங்களை உள்ளடக்கியது என்பது தெரியுமா..?

தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு. அதேசமயம் உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

தர்பூசணி விதைகளை வெயிலில் காய வைத்து வறுத்து சாப்பிடலாம். தர்பூசனி விதைகளில் பர்பி செய்யலாம். வெல்லம் போட்டு உருண்டை பிடித்து சாப்பிடலாம். பொடியாக்கி சாப்பிடலாம். விதைகளை அரைத்து watermelon seed shake, watermelon seed butter செய்து சாப்பிடலாம்.

தர்பூசணி உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமன்றி சருமத்தை பாதுகாக்கவும் உதவும். தலைமுடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். தர்பூசணி விதை எண்ணெய் விற்கப்படுகிறது. அதை சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம். அதை தலையின் வேர்களில் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்