-மன்னார் நிருபர்-
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 ஆம் நாள் விசேட திருக்கல்யாண உற்சவம் இடம் பெற்றது.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி, வெளி வீதி உலா வந்தனர்.
நாளை 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா மற்றும் 22 ஆம் திகதி புதன்கிழமை தீர்த்த உற்சவம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்