அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் அதன் விற்பனை பெறுமதி 334.24 ரூபாவாக காணப்படுகின்றது.
கடந்த 27 ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320.40 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 330.81 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.