கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அரச மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர், நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹச் பெருநாளை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கொள்வனவு செய்த மதுபான போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்குடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக, சந்தேக நபர் மதுபான போத்தல்களை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, சான்றுப் பொருட்களுடன் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.