பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவன் பொலிஸாரால் கைது

தம்புத்தேகம பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

நொச்சியாகம உடுநுவர காலனியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தம்புத்தேகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்ததை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , மாணவனை அழைத்து சோதனையிட்ட போது அவரிடமிருந்து போலி 500 ரூபாய் நாணயத்தாள்கள் ஆறு கைப்பற்றப்பட்டுள்ளது .

பின்னர், பொலிஸாரால் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து குறித்த மாணவனின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் இருந்து போலி பணம் அச்சடிக்கும் கருவிகளை கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்