தாயை தாக்கிய மகன் தலைமறைவு

மொனராகலை, தாயை தாக்கிய மகன் மனைவி குழந்தைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெரலி கசாய பிரதேசத்தில் உள்ள பெற்றோர்களின் சொந்த வீடு, காணி என்பவற்றை தனது பெயரில் எழுதி வாங்கிக்கொண்டதால் அவர்கள் சிறிய வீட்டை கட்டி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாய் இரவு உணவிற்காக காணிக்கு அருகாமையிலுள்ள பலா மரத்தில் பழம் பறிக்க முற்பட்டபோது மகன் மின்விளக்கினால் தாக்கியுள்ளார்.

தாக்குதலால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், குறித்த தாய் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைதுசெய்வதற்காக தொம்பகஹவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.தாயை தாக்கிய மகன் தலைமறைவு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்