அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமெரிக்க ஜனாதியுமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை அமெரிக்க நாட்டின் உளவுத்துறை உறுதி செய்துள்ளது.
பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியில் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதுடன் அவர் நலமுடன் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்