மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பிரதிநிதிகளை சந்தித்தார் ஜனாதிபதி

சவால்களுக்கு அஞ்சாமல், கொள்கைகளுக்கு மதிப்பளித்து, நல்ல கல்வியைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்கால சந்ததியினருக்கு ஆலோசனை வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பிரதிநிதிகள் கூட்டத்தில் இளைஞர் ஒருவர் தனது சொந்த அனுபவங்களை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கினார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சமூகத்தினருடன் ஜனாதிபதி நேற்று சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க