விகாரைக்கு சென்று வீடு திரும்பியவர் யானை தாக்கி பலி

குருணாகல் பிரதேசத்தில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீவெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பன்பொல, பக்மீவெவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் பக்மீவெவ பகுதியில் உள்ள விகாரையொன்றின் வழிபாடுகளில் கலந்து கொண்டுவிட்டு பின்னர், மீண்டும் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்