உலகக் கிண்ண கால்பந்து தொடர், குரூப்-எ பிரிவில் இன்று செக்குடியரசு மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
அட்லான்டா மைதானத்தில் நடந்த போட்டியின் 6-வது நிமிடத்திலேயே செக்குடியரசு அணி தனது முதல் கோலை அடித்தது. செக் குடியரசு அணியின் மைக்கேல் சடிலேக் கோலை அடித்தார்.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே செக்குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் முதல் பாதி வரை செக்குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் நீடித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின.
இதன் பலனாக 83-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தன.
ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் வெற்றிக்கான கூடுதல் கோலை அடிக்க தவறின.
இதனால் இந்தப் போட்டி சமநிலையில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.