அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இறுதியானதொன்றல்ல என்றும், அதில் உடனடி பொருளாதாரத் தடைகள் நீக்கம் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜி7 (G7) உச்சிமாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஈரான் சரியான முறையில் நடந்து கொள்ளாவிட்டால், “அவர்களின் தலைக்கு நடுவே நேராக குண்டுகளை வீசும்” நடவடிக்கையை அமெரிக்கா மீண்டும் ஆரம்பிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.