மகனால் தாக்கப்பட்டு தந்தை பலி

அனுராதபுரத்தில் தனிமையில் இருந்த தந்தை நேற்று ஞாயிற்று கிழமை மகனால் தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்.

ஹிரிபிட்டியகம, அலுத் வீதியில் வசிக்கும் 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் 34 வயது மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தந்தையை மகன் தொடர்ச்சியாக தாக்கியதாகவும், கொலைச் சம்பவத்தின் போது சந்தேகநபரும் உயிரிழந்த நபரும் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும் உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்