தாயை கல்லால் தாக்கி கொலை செய்த கொடூர மகன்

பதுளையில் தாயை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணின் மகன் கந்தேகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.

62 வயதுடைய சாரணியா தோட்டம் தங்கமலை பிரிவு கந்தேகெதரயை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பொசன் பௌர்ணமி தினமான 21 ம் திகதி இரவு மகனுக்கும் தாய்க்கும் இடையே ஏற்பட்ட காணி தகராறு காரணமாக ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் பின்னர் குறித்த பெண்ணின் மகன் கல்லால் குறித்த பெண்ணை தாக்கியதாகவும் , கல்லால் தாக்கப்பட்ட பெண் பலத்த காயமடைந்ததாகவும் சிகிச்சைகளுக்காக கந்தேகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த பெண்ணின் மகன் கந்தேகெதர பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரின் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட காணி தகராறு கொலையில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் தற்போது கந்தேகெதர வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபரை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 4 ம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்