இரணைமடுக் குளத்தில் நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

 

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் இன்று ஞாயிற்று கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவரது சகோதரன் மற்றும் இரு நண்பர்களும் நேற்று சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போனதையடுத்து தேடும் பணியில் இரணைமடு மீனவர்களும், பிரதேச மக்களுமாக நீண்ட நேரமாக ஈடுபட்ட போதும் மீட்க முடியாது போனது.

இதனையடுத்து இன்று மீண்டும் தேடப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்