இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசாயின்றி தாய்லாந்துக்குச் செல்ல இன்று திங்கட்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
விசாயில்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான பணவசதி மற்றும் திரும்பிவருவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும், மேலும் நாட்டின் குடிவரவு – குடியகழ்வு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாகும் என சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்