இரண்டாவது நாளாகவும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

-மூதூர் நிருபர்-

மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக  சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மூதூர் வலயத்திலுள்ள 88 பாடசாலைகளினதும் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

வழமையை விட மாணவர்களுடைய வரவு குறைவாக காணப்பட்டிருந்தன.

அத்தோடு, பாடசாலைக்கு ஆசிரியர்கள் சமூகமளிக்காமையினால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றதையும் அவதானிக்க முடிந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்