தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது இலங்கை தமிழரசுக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞான முத்து சிறிநேசன், அரியநேந்திரன் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கிய பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்