மாத்தளையில் பாதிரியார் மீது வாள்வெட்டு

மாத்தளை முதலாம் வட்டார திருச்சபையின் பாதிரியார் துஷார ரட்நாயக்க வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை எட்வட் விளையாட்டு மைதானத்தில் நேற்றுக் காலை உடற்பயிற்சியினை முடித்துக்கொண்டு கார் தரிப்பிடத்திற்கு வந்த போது இனந்தெரியாத நபரினால் வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.

வாள்வெட்டிற்கு இலக்காகி பாதிரியார் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்